Home Sitemap Contact Us Home Sitemap Contact Us Home Sitemap Contact Us
 

Testimonial

அருள் அன்பரசு - M.L.A Sholinghur Constituency, Vellore.

06.01.2004 இல் திரு.ஹரி அவர்களை சந்தித்தேன். வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நிற்க சீட் கிடைக்குமா? வெற்றி அடைவேனா? என்று கேட்டேன். 100 சதவிகிதம் ஆவேன் என்று கூறினார். அதன்படியே சீட் கிடைத்தது வெற்றி பெற்றேன்.


இந்திரா சௌந்தராஜன் - எழுத்தாளர்.

புரியாத ஸ்லோகம், கிரகம் ஆட்சி, உச்சம் என்று சொல்லாமல் பேசும் தமிழில் தமிழில் பலன் சொல்கிறார் இதனால்... நையாண்டி தர்பார் மூலம் டி.வி.மீடியாவிற்கு [ விஜய் டிவி ] அறிமுகப்படுத்தினேன். என் நண்பர்களுக்கும் எனக்கும் சொல்லப்பட்ட பலன்கள் அனைத்தும் பலித்து வருகிறது.


தங்கர் பச்சான் - இயக்குனர் & நடிகர்

எனக்கு பெரியாரின் பகுத்தறிவு கொள்கையில் தான் பிடிப்பு அதிகம் ஜோதிடம் போன்ற விஷயங்களை அடியோடு வெறுப்பவன். பலரும் ஆர்.பி.ஹரியை பற்றி, சொன்னதை கேள்விபட்டு, ஒரு ஆராய்ச்சி நோக்கத்துடன் அவரை சந்தித்தேன். எனக்கு என் பிறந்த தேதி தெரியும் - பிறந்த நேரம் தோரயமாகதான் தெரியும். இருப்பினும் அவரே என் பிறந்த நேரம் இதுவாக தான் இருக்கும் என்று கூறி ஜாதகம் தயார் செய்தார்... அதில் என் கடந்தகால சம்பவங்களை வரிசையாக கூறி வந்தார். சினிமா துறையில் நுழைந்த நுழைந்த காலம், பிரபலமான காலம், சொந்த வீடு வாங்கியது, முதன் முதலாக வாங்கிய கார் மற்றும் உறவுகளில் ஏற்பட்ட மரணம்... இப்படி எல்லாமே சரியாக இருந்தது... நான் எப்பொழுதும் உண்மையை மட்டுமே பேச கூடிய ஆள் நான் இவரிடம் ஜாதகம் பார்த்ததை மறுக்கமாட்டேன்.


சே.வி.சேகர் - முன்னாள் எம்.எல்.ஏ & நடிகர்

1984 முதல் ஆர்.பி.ஹரியை தெரியும். நாடகம், சினிமா, சொந்த வீடு, வெளிநாடு பயணம், தந்தையாரின் மரணம், மற்றும் அரசியல் வரை அவர் குறிப்பிட்ட காலகட்டத்தில் நடந்தது. ஜோதிடத்தை கடந்து, ஏதோ... ஒரு சக்தி அவரிடம் உண்டு. அவருடைய தந்தையாரின் ஆத்மா மூலம் அற்புதங்கள் நிகழ்கின்றன.


மதன் பாபு - நடிகர்

சே.வி.சேகர் மூலமாக 1984 இல் ஹரி சாரை சந்தித்தேன். இசை துறையில் இருந்த என்னை நடிப்பு துறையில் தான் நீங்கள் பிரபலமாவீர்கள் என்று சொன்னார். அதன்படியே நடந்தது - பொருளாதார வளர்ச்சியும் குறிப்பிட்டபடி உயந்தது.


அம்பிகா - நடிகை

ஹரி சாரிடம் ஜாதகம் பார்த்த பிறகுதான் தெரிந்தது எதுவுமே நம்ம கையில் இல்லையோ என்று தோன்றுகிறது. நடிகை என்பதை தவிர எத்தனையோ என் வாழ்கையில் நடந்த சம்பவங்களை ஆச்சரியப்படும்படி சொன்னார். வெளிநாடு பயணம், வீடு, நிலம், கார் போன்ற ஆடம்பர பொருள்களை வாங்கிய காலம் கூட துல்லியமாக இருந்தது.


சி.ஜே.பாஸ்கர் - சித்தி... இயக்குனர்

ரூ.3000 சம்பளத்தில் டைரக்டர் கே.பாலசந்தர் அவர்களிடம் பணியில் இருந்தபொழுது, சரியான பாதையில் ஜோதிட ரீதியாக வழிகாட்டியதில் சன் டிவியில் மெகா தொடர் சித்தி சீரியல் இயக்குனர் ஆனதுடன், அவர் சொன்ன காலகட்டத்தில் சொந்த பங்களா - ஏசி கார், பெயர், புகழ் என்று அனைத்தும் அடைந்தேன்.


பெப்சி உமா - சன் டிவி பெப்சி உங்கள் சாய்ஸ்

நான் யாரையும் லேசில் நம்பமாட்டேன் - ஜோதிடம், ஜாதகம் என்றாலே முகத்தை சுளிப்பேன். ஆனால் ஆர்.பி.ஹரியை சந்தித்த பிறகு அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தேன். எனக்கு மட்டுமே தெரிந்த விஷயங்களை தெளிவாக கூறியதுடன் பலன்களும் துல்லியமாக நடந்துள்ளது. என் சகோதரனுக்கு ஏற்பட்ட கார் விபத்தை முன்கூட்டியே தெரிவித்தார்.


ஷகீலா - நடிகை

மிகப்பெரிய தொழில் அதிபர் மூலமாக ஆர்.பி.ஹரி அவர்களை சந்தித்தேன்.அவர் குறிப்பிட்ட காலத்தில் மலையாள துறையில் கொடிகட்டி பறந்தேன்.வசதிகளும் கூடியது. துணை நடிகையாக சாதாரண நிலையில் இருந்து, மிக நல்ல நிலைக்கு உயர்ந்தேன்.


விஸ்வா - சின்னத்திரை நடிகர்

விதவையான என் சகோதரிக்கு பரிகாரங்கள் செய்து 2ஆம் திருமணம் நடக்கும்படி செய்தார். பத்திரிகை துறையில் இருந்த என்னை முழுநேர நடிகனாவேன் என்பதை சொன்னார். பலித்தது. சொந்த வீடு, கார் எல்லாமே அவர் சொன்ன வருடம் மாதத்தில் அமைந்தது.16 வருடமாக குழந்தை இல்லை - ஏ.மீனாட்சி சுந்தரம் நெ.48, கச்சேரி ரோடு, மைலாப்பூர், சென்னை-4.

26.08.1990 இல் திருமணமாகி, 16 வருடங்கள் ஆகிறது குழந்தை இல்லை.லட்சக்கணக்கில் மருத்துவ செலவு செய்தும் பலன் ஏற்படவில்லை ஹரி ஜோதிடரிடம் அனுமதி வாங்கி, அவருடைய ஆலோசனைகள்படி சில பூஜைகள் செய்த பிறகு 2007 இல் குழந்தை பிறக்கும் என்று 2006 இல் பலன் கூறினார்.அனைவரும் ஆச்சரியபடும்படி 28 பிப்ரவரி 2007 இல் ஆண் குழந்தை பிறந்தது.ஹரியின் ஞாபகர்த்தமாக குழந்தைக்கு ஹரிபிரபு என்று பெயர் சூட்டி உள்ளோம்.


 

 
Home  |   About Us  |   Media  |   Interview  |   Testimonial  |   E-Books  |   Articles  |   Contact Us  |   Feedback  |   Site Map
Copyright 2013 rphari.com. All rights Reserved.
Designed By Sircon              Hits: